2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கு முதலாவது கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

Menaka Mookandi   / 2012 ஜூலை 06 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான், எம்.சுக்ரி)

எதிர்வரும் கிழக்குமாகாண சபைத்தேர்தலுக்கு மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகம் தயாராகிவருகின்றது. மாகாண சபைத் தேர்தலுக்கான முதலாவது கட்டுப்பணம் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் எனும் சுயேட்சைக்குழு ஒன்றின் சார்பாக நேற்று வியாழக்கிழமை செலுத்தப்பட்டதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

காத்தான்குடியைச்சேர்ந்த ஏ.ஜீ.எம்.ஹாறூன் என்பவர் இக்கட்டுப்பணத்தைச்செலுத்தியுள்ளயதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தில் ஏழு நாட்களும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலுக்கான அலுவல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இம்மாவட்டத்தில் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் வாக்களிக்கவென 3 இலட்சத்து 47 ஆயிரத்து 99 ஏபர் தகுதி பெற்றுள்ளதாகவும் உதவி தேர்தல் ஆணையாளர் அசங்க ரத்னாயக்கா தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .