2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

வியாபார பதிவு, வருமான வரி தெளிவூட்டல் கருத்தரங்கு

Super User   / 2012 ஜூலை 06 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ரி.லோஹித்)


மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான வியாபார அனுமதிப் பத்திரம் வியாபார பதிவு பெறுவதன் முக்கியத்துவமும் வருமான வரி தொடர்பான தெளிவூட்டல் ஒரு நாள் கருத்தரங்கு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் வி.ரஞ்சித மூர்த்தி தலைமையில் ஆரம்பமான கருத்தரங்கின் ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு  பிரதி மேயர் எஸ்.ஜோர்ஜ் பிள்ளை, மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், உள்நாட்டு இறைவறித் திணைக்களத்தின் மாவட்ட பிரதி ஆணையாhளர் எஸ்.கணேசநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .