2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

வாழைச்சேனையில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு

A.P.Mathan   / 2012 ஜூலை 06 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித், அனுருத்தன்)

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேத்தாழை பிரதேசத்தில் ஒரு தொகை ஆயுதங்கள் வெலிக்கந்தை சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டுள்ளன.

கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

பேத்தாழை, விநாயகபுரம் பகுதியில் மக்கள் நடமாற்றம் அற்ற பகுதியிலேயே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட ஆயுதங்கள் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

ரி56 ரக துப்பாக்கி-1, கைக்குண்டு -1, மிதிவெடி உள்ளிட்ட பொருள்களே புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இவை விடுதலைப்புலிகளால் யுத்தம் நடைபெற்ற காலங்களில் மறைத்துவைக்கப்பட்டவையாக இருக்கலாம் என சிவில் பாதுகாப்பு பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .