2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

தேசத்தின் மகுடம் கண்காட்சியையொட்டி வெல்லாவெளியில் பாரிய அபிவிருத்தித் திட்டம்

Kogilavani   / 2012 ஜூலை 07 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் 154 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப்பணிகள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போதே மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் வெல்லாவெளி பிரதேசத்தின் அபிவிருத்திக்குழு தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

வெல்லாவெளி பிரதேச செயலாளர் வில்வரெட்னம், திறைசேரியின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் எஸ்.ராமூர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பிரிவின் அதிகாரி சுதாகரன் உட்பட திணைக்கள தலைவர்கள், வெல்லாவெளி பிரதேசசபையின் தவிசாளர் சிறிதரன், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது, அப்பகுதியில் சுமார் 24 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ள பாலங்கள், வீதி புனரமைப்பு திட்டங்கள், விவசாயிகளின் நீண்ட நாள் பிரச்சினையை தீர்க்க நெற் களஞ்சியம் அமைக்க 20 மில்லியன்கள் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளமை என்பவை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் வெல்லாவெளி கல்விக் கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளில் உள்ள தேவைகளை தீர்க்கும் பொறுட்டு ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள சுமார் 23 மில்லியன் ரூபா தொடர்பிலும் அவற்றின் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதேபோன்று யானையின் தாக்கத்தினால் சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்காகவும், குடிநீர் திட்டம், விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .