2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மட்டு.போதனா வைத்தியசாலையில் பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Kogilavani   / 2012 ஜூலை 07 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

தேசிய டெங்கு ஒழிப்பு மாதத்தையொட்டி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தம் தலைமையில் இடம்பெற்ற முழுமையான டெங்கு ஒழிப்பு மற்றும் சிரமதான நடவடிக்கைகளில் வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள,; சிற்றூழியர்கள் உட்பட சுமார் 300க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

இந்நடவடிக்கையின் போது வைத்தியசாலை சுற்றுப்புறம் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் விஷேட பௌசர்கள் கொண்டு வடிகான்களும் துப்புரவு செய்யப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .