2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி தொடர்பான மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு அங்கீகாரம்

Kogilavani   / 2012 ஜூலை 07 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

கிழக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேசத்துக்கு மகுடம் கண்காட்சியையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு மாவட்ட அபிவிருத்திக்குழு இன்று அங்கீகாரம் வழங்கியது.

இன்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, விநாயகமூர்த்தி முரளிதரன், பசீர் சேகுதாவூத் கிழக்கு மாகாண முன்னாளர் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் உட்பட அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள். உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 4800 மில்லியன் ரூபாய் செலவில் பாரிய அபிவிருத்தி பணிகள் இம்மாவட்டத்தில் இடம் பெவுள்ளன.

கல்வி, சுகாதாரம், மின்சாரம், விளையாட்டு, கடற்றொழில், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் 100கிலோ மீற்றர் வீதி முழுமையாக கார்பட் வீதியாக நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்படத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .