2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மஸ்ஜித் பரிபாலனம் தொனிப்பொருளிலான கலந்துரையாடல்

Kogilavani   / 2012 ஜூலை 08 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மஸ்ஜித் பரிபாலனம் எனும் தொனிப்பொருளில் காத்தான்குடியிலும் அதனை சூழவுள்ள பள்ளிவாயல்களினதும் நிருவாகிகளுக்கான கலந்துரையாடலொன்று காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் எற்பாட்டில் நேற்று சனிக்கிழமை புதியகாத்தான்குடி பெரிய ஜும் ஆ பள்ளிவாயல் மதரஸா மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஏ.எல்.ஆதம்லெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் பளீள் மௌலானா நழீமி கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்.

இதில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்த்தபா உட்பட அதன் நிருவாகிகள் பள்ளிவாயல்களின் நிருவாகிகள் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .