2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

கிரான்குளத்தில் பொலிஸ் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2012 ஜூலை 08 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் கிரான்குளத்தில் பொலிஸ் நடமாடும் சேவையொன்று நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெற்ற  பொலிஸ் நடமாடும் சேவையில் பிறப்பு, இறப்பு பதிவுக்கான விண்ணப்பப்படிவங்கள் வழங்கல் மற்றும் தேசிய அடையாள அட்டை காணாமல் போனவர்களின்  முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி;க்கான இரத்ததானம் நடைபெற்றதுடன், ஆயுர்வேத சிகிச்சை முகாமும் நடைபெற்றது.

இதில் பாடசாலை மாணவர்களுக்கான நோய்கள் பற்றிய விழிப்புணர்வு செயலமர்வும் மண்முனைப்பற்று சுகாதார அலுவலகத்தினால் நடத்தப்பட்டது.

பொலிஸ் நடமாடும் சேவையில் பொலிஸ் அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் பொதுச்சுகாதார அதிகாரிகள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .