2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

பசுமை நகர திட்டத்தின் கீழ் மர நடுகை

Kogilavani   / 2012 ஜூலை 08 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

பசுமை நகர திட்டத்தின் கீழ் காத்தான்குடி ஆற்றங்கரையோர மர நடுகைத்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீனின் மாகாண சபை பண்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் இம் மர நடுகைத் திட்ட நிகழ்வு முபீன் பௌன்டேஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் ஹஸரத் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .