2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஸ்கேனிங் இயந்திரம் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 09 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஸ்கேனிங் செய்யும் இயந்திரமொன்று நேற்றுமுன்தினம் சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியைத் தொடர்ந்து சுகாதார அமைச்சினால் 22 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்கேனிங் இயந்திரம் வழங்கப்பட்டது.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.அஸீஸிடம் இவ் ஸ்கேனிங் இயந்திரத்தை கையளித்தார்.

இதற்கான நிகழ்வில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் டாக்டர் அகிலன், காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .