2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஈரானுக்கு விஜயம்

Kogilavani   / 2012 ஜூலை 09 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                (எம்.சுக்ரி)
ஈரானில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஆசிய நாடாளுமன்ற அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று திங்கட்கிழமை ஈரான் பயணமாகின்றார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இம் மாநாட்டில் ஆசிய நாடுகளில் மது பாவணை மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவணைகளை தடைசெய்வது தொடர்பாகவும் ஆசிய நாடுகளில் பொதுவான ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் இதனை தடைசெய்வது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.

ஈரான் நாட்டு உதவி ஜனாதிபதி மற்றும் மகளிர் விவகார அமைச்சரை சந்தித்து பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பேசவுள்ளார் என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஊடக இணைப்பாளர் முகம்மட் சஜி தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .