2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 09 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்று எதிர்வரும் 13ஆம் திகதி காலை 9 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் மற்றும்  பிரதி அமைச்சர்கள் தலைமையிலும் இச்செயலமர்வு நடைபெறவுள்ளது.

இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தித்திட்டங்கள், எதிர்காலச் செயற்றிட்டங்கள் தொடர்பில் அரசாங்க அதிபர் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார். அத்துடன், கள விளக்கங்களும் நடைபெறும்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்கள் அனைவரும் இச்செயலமர்வில் கலந்துகொள்ள முடியுமென தகவல் திணைக்கள அதிகாரி ஹில்மி முகமட் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரையும் மீள்குடியேற்ற பிரதியமைச்சின் அலுவலக அதிகாரிகளையும் சந்தித்து இச்செயலமர்வு தொடர்பான ஆரம்ப வேலைகளை ஹில்மி முகமட் மேற்கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .