2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

தாமரைப்பூச்சந்தி பொலிஸ் காவலரண் அகற்றப்பட்டு பொதுமக்களிடம் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 ஜூலை 09 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு, பட்டிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பிளாந்துறை, தாமரைப்பூச்சந்தி பொலிஸ் காவலரண் அகற்றப்பட்டுள்ளதுடன் அவை பொதுமக்களிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டுக்கு முன்னர் இப்பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்ததுடன் அது மீட்கப்பட்ட பின்னர் படையினரின் படை முகாமாக செயற்பட்டுவந்தது.

பின்னர் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் அவற்றில் இருந்து படையினர் வெளியேறிய நிலையில் பொலிஸார் பொறுப்பேற்றனர். இந்த நிலையில் கடந்த காலத்தில் குறித்த காவலரண் அமைக்கப்பட்டுள்ள வீடுகளின் உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அவற்றை பொலிஸார் பொதுமக்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை காவலரண் அகற்றப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .