2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

படுவான்கரை தென்னை மரங்களில் நோயக்கிருமி; விவசாயிகள் கவலை

Menaka Mookandi   / 2012 ஜூலை 10 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப்பகுதியில் உள்ள தென்னைமரத் தோட்டங்களில் ஒருவித நோய்கிருமிகள் தொற்றியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பாலையடிவட்டை 35ஆம், 37ஆம், 38ஆம், கிராமங்களில் உள்ள தெங்கு விவசாயிகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேங்காய்களுக்கு ஒருவித கறுப்பு நிறப்புள்ளிகள் விழுவதனால் தமக்கு எதிர்பார்த இலாபம் கிடைப்பதில் பாரிய சிக்கல்களை எதிர்க்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தேங்காய்களை கொள்வனவு செய்பவர்கள் தயக்கம் காட்டிவருவதாகக் கூறும் அப்பகுதி விவசாயிகள், இவற்றுக்கு வேண்டிய விவசாய ஆலோசனைகளையும் நவீன முறையிலான தென்னந்தோட்டச் செய்கையினையும் எதிர்பார்ப்பதாகவும கூறுகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .