2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

குருக்கள்மட வாகன விபத்தில் ஒருவர் பலி

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 06 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா, ஜதுசன்)

மட்டக்களப்பு - கல்முனை நெடுஞ்சாலையில் குருக்கள்மடம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இன்று இரவு 9.00 மணியளவில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம், வளைவுப்பகுதியில் பழுதடைந்த நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ்ஸுடன் மோதியே இந்த விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மிகவேகமாக வந்த இருவர் பஸ்ஸுடன் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் இருவரும் தலைக்கவசம் அணியாத நிலையிலேயே சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின்போது ஸ்தலத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் இன்னுமொருவர் ஆபத்தான நிலையில் ஆரையம்பதி வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கிராண்குளம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் பகீரதன் (22வயது) என்பவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தவர் ஆரையம்பதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு வருகைதந்த களுவாஞ்சிகுடி பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சர் பிரியந்த லியனகே மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.ஆர்.மானவடு ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். (படங்கள் : ஜதுஷன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .