2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட பிரதான தனியார் போக்குவரத்து பஸ் நிலையம் திறப்பு

Super User   / 2012 ஒக்டோபர் 07 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு மாவட்ட பிரதான தனியார் போக்குவரத்து பஸ் நிலையம் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு நகரில் திறந்துவைக்கப்பட்டது.

இலஙகை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு பஸ் நிலையத்துக்கு அருகில் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வேண்டுகோளின் பேரில் சுமார் 41 இலட்சம் ரூபா செலவில் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தனியார் போக்குவரத்து பஸ் நிலையத்தின் முகாமையாளர் யுவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலபதி, பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பஸ்ஸின் சேவையினை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் ஆரம்பித்துவைத்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்;குமான தனியார் போக்குவரத்து சேவையினை சிறப்பான முறையில் மேற்கொள்வதற்கு இந்த நிலையம் வழி அமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .