2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

'அரசு அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றபோதிலும், வீட்டுச்சின்னம், மரச்சின்னத்திற்கே மக்கள் வாக்களிக்கின

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 08 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

அரசாங்கம் பாரிய அபிவிருத்திப் பணிகளை செய்துவருகின்றபோதிலும், இங்கு வீட்டுச்சின்னத்திற்கும் மரச் சின்னத்திற்குமே மக்கள் வாக்களிக்கின்றனரென கிழக்கு மாகாண கல்வி மற்றும் காணி போக்குவரத்து அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பஸ் தரிப்பு நிலையக்கட்டிடத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலாசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் நிதியொதுக்கீட்டின் கீழ், 40 இலட்சம் ரூபா செலவில்; இத்தனியார் பஸ் தரிப்பு நிலையக்கட்டிடம் அமைக்கப்பட்டது.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'அரசாங்கத்தினால் இங்கு பாரிய அபிவிருத்திப்பணிகள முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் இம்மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் பாடசாலைகளுக்கு மாணவர்கள் 5 கிலோமீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. இன்று அவ்வாறான நிலைமையில்லை. மாணவர்கள் பாடசாலைகளுக்கு பஸ் வண்டிகளில் இலகுவாக செல்லக்கூடிய நிலைமையை நாம் உருவாக்கித் தந்துள்ளோம்.
இன்று அனைத்துத் துறைகளும் அபிவிருத்தியடைந்து வருகின்றன. கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தையும் அரசாங்கம் அபிவிருத்தி செய்கின்றது.

கடந்த காலங்களில் நாம் திருகோணமலைக்கு செல்வதாயின் ஒரு நாள் பயணம் செய்யவேண்டியிருந்தது. இன்று நிலைமை அவ்வாறில்லை. ஒன்றரை அல்லது இரு மணித்தியாலயங்களில் இங்கிருந்து நாம் திருகோணமலைக்கு செல்கின்றோம். இங்கு தமிழா,; முஸ்லிம், சிங்களவரெனப் பார்த்து அபிவிருத்திகள் செய்யப்படவில்லை. இவ்வாறான அபிவிருத்திப்பணிகளை செய்யும் அரசாங்கத்திற்கு வாக்களிக்கத் தவறுகின்றோம். எதிர்காலத்திலாவது இவைகளை உணர்ந்து மக்கள் செயற்படவேண்டுமென நான் கேட்டுக்கொள்கின்றேன்' என்றார்.

இவ்வைபவத்தில் கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் திருமதி ஆரிவதி கலபதி, பிரதித் தவிசாளரும் முன்னாள் மாகாண சுகாதார அமைச்சருமான எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எப்.சிப்லி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .