2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

மண்முனைத்துறை – கொக்கடிச்சோலை நீர்வழிப் பாதை சேவை மீண்டும் ஆரம்பம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 08 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


கடந்த ஒருமாத காலமாய் இடைநிறுத்தப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நீர்வழிப் பயணச் சேவையான மண்முனைத்துறை – கொக்கடிச்சோலை நீர்வழிப் பாதை சேவை மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகள் அமைச்சின் அனுரசரணையுடன் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் இலவசமாக நடத்தப்பட்டுவரும் இப்பாதை சேவையினால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பெருநன்டையடைந்து வந்தனர்.

ஒருபாதை பழுதடைந்தமையால் கடந்த ஒரு மாதகாலமாக ஒரு பாதையே சேவையிலீடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வந்தனர்.

பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், வீதி அபிவிருத்தி திணைக்களத்திடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து பாதை மீண்டும் திருத்தியமைக்கப்பட்டு இன்றுமுதல் வழமையான சேவையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .