2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

த.தே.கூ. ஆதரவாளர் வீட்டில் பட்டாசு வீசப்பட்டது: பொலிஸார்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளரொருவரின் வீட்டினுள் பட்டாசு வெடிக்கவைத்து போடப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரையம்பதி பிரதேசத்தில் செங்குந்தர் வீதியில் வசிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளரான கணபதிப்பிள்ளை யோகராசா என்பவரின் வீட்டிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இவ்வாறு பட்டாசு போடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பாக அவ்வீட்டிலுள்ளவர்கள் தெரிவிக்கையில்,

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த நாங்கள்; இவ்வெடிச்சத்தத்தைக் கேட்டு அச்சமடைந்தோம். பட்டாசு வெடித்து வீட்டிலுள்ள நுளம்பு வலை தீப்பற்றியதாகவும் பின்னர் இத்தீயை நாங்கள் அணைத்தோம்.   இனந்தெரியாத சிலரே இங்கு வந்து பட்டாசை வெடிக்கவைத்து வீட்டினுள் போட்டுள்ளனர்' என்றனர்.

இது தொடர்பில் இவ் ஆதரவாளர் முறைப்பாடு செய்த நிலையில், காத்தான்குடி பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .