2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

தேசிய உள்ளூராட்சி வாரத்தினையொட்டி டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 15 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

தேசிய உள்ளூராட்சி வாரத்தினையொட்டி மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை காலை மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன், பிரதி முதல்வர் ஜோர்ஜ்பிள்ளை, மாநகரசபை உறுப்பினர்களான ரகுமான், அருமைலிங்கம், பொதுச்சுகாதார பரிசோதகர்களான இராஜேந்திரா, ராகல் உட்பட பலரும்  கலந்துகொண்டனர்.

சிரமதானத்தின் போது டெங்கை ஏற்படுத்தும் நுளம்பு பெருக்கம் உள்ள இடங்கள் அடையாளங்காணப்பட்டு அவை துப்புரவுசெய்யப்பட்டதுடன் வெள்ள காலங்களில் நீர் செல்லும் பகுதிகளில் உள்ள பற்றைகள் அகற்றப்பட்டு வடிகான்கள் துப்புரவு செய்யப்பட்டன.

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிகழ்வுகள் எதிர்வரும் 21ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .