2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

டெங்குநுளம்பு பரவுவதற்கு காரணமாக இருந்த இருவர் மீது சட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 15 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தில் இம்மாதம் டெங்குநுளம்புகள் பெருகுவதற்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படும் இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

ஏறாவூரில் பழைய சந்தை வீதியை அண்மித்த பகுதியில் இம்மாதத்திலிருந்து இன்றுவரையில்  டெங்குநோய்த் தாக்கம் காரணமாக 5  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பிரதேசத்தில் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், புகை அடித்தலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .