2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

கிழக்கு முதலமைச்சருக்கு ஏறாவூரில் வரவேற்பு

Super User   / 2012 ஒக்டோபர் 24 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வொன்று நேற்று செவ்வாய்கிழமை ஏறாவூரில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் - கலாசார பாரம்பரிய நடன மற்றும் இசைக் கலைஞர்களால் வரவேற்று அழைத்துச் செல்லப்பட்டு ஏறாவூர் பிரதேச மக்கள் வரவேற்பளித்தனர்.

இதனையடுத்து, இடம்பெற்ற பகிரங்கக் கூட்டத்திலும் முதலமைச்சர் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் நபீப் ஏ. மஜீத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண அமைச்சர்களான ஹாபீஸ் நஸீர் அஹமட், எம்.ஐ.எம். மன்சூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .