2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

அமெரிக்க தூதுவரின் வாகனம் விபத்து

Super User   / 2012 ஒக்டோபர் 24 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் வாகனம் இன்று புதன்கிழமை மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது என கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

கரடியனாற்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசன் மட்டக்களப்பு திரும்பும் போதே இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க தூதுவர் பயணித்த வாகனம் இராணுவ வீரரொருவரின் மோட்டார் சைக்கிளுடன் மோதியமையினாலேயே இந்த வாகன விபத்து இடம்பெற்றது என கரடியனாறு பொலிஸார் குறிப்பிட்டனர்.

"எனினும் இந்த வாகன விபத்தினால் அமெரிக்க தூதுவரிற்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. அத்துடன் அவர் பயணித்த வானம் சிறியளவிலேயே சேதத்திற்குள்ளாகியுள்ளது" எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

"மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவ வீரருக்கு சிறியளவில் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை" என கரடியனாறு பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .