2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தேசிய பசளை வாரம்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 26 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

கமநல சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் சகல கமநல சேவைகள் பிரிவுகளிலும் நடாத்தப்படும் 'தேசிய பசளை வாரம்' நேற்று ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையம் ஏற்பாடு செய்த தேசிய பசளை வார அறிவூட்டல் பட்டறை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.றஷீட் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், விவசாய போதனாசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச விவசாயிகளும் கலந்துகொண்டனர்.

தேசிய பசளை வார அறிவூட்டல் பட்டறையில் அரசாங்கத்தால் வழங்கப்படும் பசளை மானியக் கொள்கையினால் விவசாயிகள் அடையும் நன்மைகள் தொடர்பாகவும், மானிய உரம் வழங்கும் திட்டத்தால் தேசிய பொருளாதாரத்தில் விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

அறிவூட்டல் பட்டறையில் வளவாளர்களாக கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.றஷீட், விவசாய போதனாசிரியர் எஸ்.கலைமோகன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .