2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

அனுமதிப் பத்திரமற்ற கடைகளை அகற்ற உத்தரவு

Super User   / 2012 ஒக்டோபர் 30 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

களுவாஞ்சிகுடி பிரதான வீதியின் இருமருங்கிலும் அனுமதிப் பத்திரமின்றி அமைக்கப்பட்டுள்ள கடைகளை நாளை 31ஆம் திகதி முன் அகற்றுமாறு களுவாஞ்சிகுடி பிரதேச சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பான களுவாஞ்சிகுடி பிரதேச சபையின் அறிவித்தல் ஒக்டோபர் 25ஆம் திகதி எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி பிரதேச சபையின் அனுமதியின்றி பிரதான வீதியின் இரு பக்கங்களிலும் அமைக்கப்பட்ட கடைகளை உடனடியாக அகற்று வேண்டும் என பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிவில் நிருவாக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால் 31ஆம் திகதிக்கு முன் அப்புறப்படுத்தாது விட்டால் சபை பொலிஸாரின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் பிரதிகள் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதாரி, மற்முறு; களுவாஞ்சிகுடி வர்த்தக சங்கத்தின் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .