2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

Super User   / 2012 ஒக்டோபர் 30 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று பேர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில  மாதங்களாக வாழைச்சேனை, மீராவோடை போன்ற பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள் கொள்ளையிடப்பட்டு வந்துள்ளன. இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொதுமக்களால் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீராவோடை, கிண்ணயடி வீதியிலுள்ள கடையில் பொருட்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை நேற்று இரவு திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடம் இருந்து பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்களுடன் மேலும் சிலர் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இச்சந்தேக நபர்கள் தொடர்ந்;து விசாரிக்கப்பட்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .