2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

வரியிறுப்பாளர்களுக்கான செயலமர்வு

Kogilavani   / 2012 நவம்பர் 02 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                      (எம்.சுக்ரி)
மட்டக்களப்பு நகரத்திலுள்ள வரியிறுப்பாளர்களுக்கான செயலமர்வொன்று நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.

தேசிய வரி வாரத்தினை முன்னிட்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட இச்செயலமர்வில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட பிரதி ஆணையாளர் எம்.கணேசராசா, மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி உட்பட உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள், மட்டக்களப்பு நகரத்திலுள்ள வரியிறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது வரிசெலுத்துவதன் அவசியம், வரி செலுத்த தவறும்போதுள்ள சிக்கல்கள், வரி செலுத்துவதன் மூலம் வரியிறுப்பாளர்கள் பெற்றுக்கொள்ளும் நன்மைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல்; நவம்பர் 8ஆம் திகதி வரையான காலப்பகுதி தேசிய வரி வாரமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .