2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் சிறுவர் துஷ்பிரயோகங்களை ஒழிக்க விஷேட விழிப்புணர்வு திட்டம் அமுல்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 03 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சிஹாரா லத்தீப்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்களை ஒழிக்க சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் ஆலோசனைக்கமைய விண்ஷட திட்டங்களை பொதுமக்கள், சிறார்கள் ஒன்றுகூடும் பொது இடங்கள் மற்றும் பாடசாலைகளில் அமுல்படுத்த மாவட்ட சிறுவர் பாதுகாப்பு குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதற்கமைய இம்மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிள்  சிறுவர் துஷ;பிரயோகங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு விண்ஷட நிகழ்வுகளை மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸின் வழிகாட்டுதலில் நடாத்த மாவட்ட சிறுவர் பாதுகாப்பு குழு முன்வந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக அதிகாரி பீ.அப்துல்லத்தீப் தெரிவித்தார்.

இந்த விண்ஷட திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்படவுள்ள சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வென்று  மட்டக்களப்பு மாவட்ட செயலக முன்றலில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த ஆரம்ப நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ்இ உதவி மாவட்ட செயலாளர் வீ. வாசுதேவன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர் பலரும் பிரசன்னமாயிருந்தனர். இந்த சிறுவாட விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்றைய தினம் ஏறாவூர் நகரம்இ பட்டிப்பளைஇ கிரான் பிரதேச செயலாளர் பரிவுகளில் அமுல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இம்மாவட்டத்தில் அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகங்களிலிருந்து சிறுவர்களை பாதுகாக்க பொது மக்களுக்கும்  விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலே மாவட்ட சிறுவர் பாதுகாப்பு குழு இத்திட்டத்தை அமுல் நடத்தி வருவதாக மாவட்ட அரசாந்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

இந்த விண்ஷட திட்டங்களை அமுல்நடாத்த சிறுவர் பாதுகாப்பு தேசிய செயலகம்இ சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைஇ ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மாகாண சிறுவர் நன்நடத்தை திணைக்களம் என்பன இணைந்து அமுல் நடாத்தி வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .