2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

கோறளைப்பற்றில் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 04 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


2013ஆம் ஆண்டுக்கான தேசத்திற்கு மகுடம் கண்காட்சியையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் தோறும் நடமாடும் சேவை நடத்தப்பட்டு வருகின்றது.  இந்நிலையில்,  இரண்டாவது நடமாடும் சேவை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

சமாதானத்துக்கும்; அமைதிக்குமான அமைப்புக்களின் பேரவை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்திய நடமாடும் சேவை, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் தலைமையில் நடைபெற்றது. இந்நடமாடும் சேவையை மட்டக்களப்பு மாவட்ட மேலதிகச் செயலாளர் கே.விமலநாதன், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் எஸ்.நேசராசா, சமாதானத்துக்;கும் அமைதிக்குமான அமைப்புக்களின் பேரவையின் இணைப்பாளர் பி.ஜெயபாரதி ஆகியோர் ஆரம்பித்துவைத்தனர்.

பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள்,  திருமணப்பதிவுச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பம், புதிய மற்றும் காணமல் போன தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பம், காணிப் பிரச்சினைகளுக்கான முறைப்பாடுகள் ஆகியவை இங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டன. அத்துடன், பொலிஸ் முறைப்பாடுகளும் பெறப்பட்டதுடன், சட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இந்நடமாடும் சேவையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஓன்பது கிராம அலுவலகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் நன்மையடைந்தனர்.  சமூக சேவைகள் திணைக்களத்தால் தெரிவுசெய்யப்பட்ட நான்கு அங்கவீனர்களுக்கு சக்கரநாற்காலிகளும் வழங்கப்பட்டன.

விண்ணப்பங்களுக்கான முத்திரைக் கட்டணம், அடையாள அட்டைக்கான புகைப்படம் என்பற்றை சமாதானத்திற்கும் அமைதிக்குமான அமைப்புக்களின் பேரவை யு.எஸ்.எய்ட் நிதியுதவியில் இலவசமாக வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .