2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

கட்டாருக்கான இலங்கை தூதுவர் - காத்தான்குடி பிரதி தவிசாளர் சந்திப்பு

Super User   / 2012 நவம்பர் 04 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


அண்மையில் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு கட்டாருக்கு விஜயம் மேற்கொண்ட காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் கட்டாருக்கான இலங்கை தூதுவர் ஜயந்த பாலிபனவை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, கட்டாரில் தொழில் புரியும் இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் எமது நாட்டு உற்பத்திப் பொருட்களை கட்டாரில் சந்தைப்படுத்துதல் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

கட்டாருக்கான இலங்கையின் பிரதி தூதுவர் சிதாரா கானும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். இதேவேளை, கட்டாரில் தொழில் புரியும் இலங்கையர்களையும் நகர சபையின் பிரதி தவிசாளர் ஜெஸீம் சந்தித்து கலந்துரையாடியதுடன் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டடங்களிலும் கலந்துகொண்டார்.

இந்த சந்திப்பின் போது இலங்கையர்களின் தொழில் நிலைகள் தொடர்பாகவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றியும் கேட்டறிந்துகொண்டதோடு தொழில் முயற்சிகள் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .