2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

மட்டு. மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு

Super User   / 2012 நவம்பர் 04 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருந்த மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

இந்த கூட்டம் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நாளை நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

எனினும் மாவட்டத்தின் முக்கிய அமைச்சர்களும் ஆளும்  கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாளை ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் முக்கிய கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதால்  இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .