2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு சோதனை

Kogilavani   / 2012 நவம்பர் 05 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான், கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு மாநகரசபை பிரதேசத்தில் இன்று காலை டெங்கு நுளம்பு திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 65 வீடுகள் 7 பாடசாலைகள் 6 ஹோட்டல்கள், வங்கிகள் அரச நிறுவனங்கள் என்பன சோதனையிடப்பட்டன.

இதில் டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த பல நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர் கே.ராஜ்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபை பொலிஸ் திணைக்களம், மாகாண பிரதி சுகாதார சேவைகள் பணியகம் ஆகியன இணைந்து மேற்கொண்ட இத்திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சூழல் பாதுகாப்பு பொறுப்பதிகாரி ஐ.பி.ஜெயசுந்தர, மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் திருமதி பி.ரஞ்சன் மாநகர சபை உறுப்பினர் நாகூர்கான் றம்ழான் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் இணைந்திருந்தனர்.

விசேட டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .