2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு - பொலனறுவையினூடான போக்குவரத்து பாதிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
சீரற்ற காலநிலையினால் மட்டக்களப்பு பொலனறுவையினூடான போக்குவரத்து மீண்டும் நேற்று சனிக்கிழமை முதல் துண்டிக்கப்பட்டுள்ளது.

மன்னப்பிட்டி மற்றும் கல்லல பிரதான வீதியில் பாயும் 6அடி வெள்ளத்தினால் மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும்  இடையிலான பொலனறுவையினூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் மட்டக்களப்பிலிருந்து நேற்று மாலை கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் எந்த தடையுமின்றி கொழும்பு சென்றடைந்ததாக மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தி;ல் கடந்த சில தினங்கள் மழை ஓய்ந்திருந்த போதிலும் சனிக்கிழமை முதல் பெய்து வரும் கடும் மழையினால் மீண்டும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X