2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

பணிச்சேங்கேணியூடான போக்குவரத்துக்கு விசேட பஸ்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வாகரை பணிச்சேங்கேணியூடான போக்குவரத்துக்கு விசேட பஸ்சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இலங்கை போக்குவரத்துச்சபையின் பிராந்திய செயலாற்றுகை முகாமையாளர் எஸ்.கனகசுந்தரம் தெரிவித்தார்.

கடந்த ஐந்து தினங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டிருக்கும் இப்பகுதி போக்குவரத்தை கருத்தில்கொண்டு பணிச்சங்கேணி பாலத்தில் இருந்து மாவடிச்சேனை வரையில் இந்த பஸ் சேவையில் ஈடுபடும் எனவும் அவர் தெரிவித்தார்.

வாகரை பிரதேச மக்களின் நன்மை கருதியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் நன்மை கருதியும் இந்த சேவை காலை 6.00மணி தொடக்கம் மாலை 6.00மணி வரை இடம்பெறும் என கனகசுந்தரம் தெரிவித்தார்.

இதேவேளை பணிச்சங்கேணி பாலம் பழுதடைந்துள்ள நிலையில் ஆற்றை மக்கள் கடப்பதற்கு கடற்படையினரும் இராணுவத்தினரும் உதவி புரிந்துவருவதுடன் பிரதே செயலகத்தினாலும் கடற்படையினாலும் இயந்திரப்படகு சேவைகளும் நடத்தப்பட்டுவருவதாக வாகரை பிரதேச செயலகம் தெரிவித்தது.

மக்கள் பணிச்சங்கேணி பாலத்தினை கடப்பதற்காக இரு மருங்கிலும் கம்பிகள் கட்டப்பட்ட நிலையில் மக்களின் போக்குவரத்துக்கு கடற்படையினரும் இராணுவத்தினரும் உதவி வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X