2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

சிறுவர் பாதுகாப்புக் குழுக் கூட்டமும் செயலமர்வும்

Kogilavani   / 2012 டிசெம்பர் 25 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித் எம்.சுக்ரி)

மண்முனை மேற்கு பிரதேச சிறுவர் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எதிர்வரும் 2013ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், 2012ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்கள், நடவடிககைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

அத்துடன் எதிர்வரும்  திட்டங்கள் தொடர்பிலான தீர்மானங்களும்  நிறைவேற்றப்பட்டன.

இதன்போது, பிரதேச செயலாளர் வி.தவராஜா, மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரி மனோகரன், சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் எம்.வரதராஜன், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியேகத்தர் ரி.மதிராஜ், மற்றும் பிரதேசத்தின சிறுவர் குழு உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டனர்.

இதேவேளை, சிறுவர் பராமரிப்பு தொடர்பான ஒரு நாள் செயலமர்வு காத்தான்குடியிலுள்ள குர் ஆன் பாடசாலைகளின் முஸ்லிம்களுக்கு காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று  நடைபெற்றது.

சிறுவர் நன்னடத்iதை திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்த செயலமர்வு நடைபெற்றது.  காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பிரபா, உளவளத்துரை அதிகாரி எம்.நியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X