2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிழக்குப் பல்கலைக்கழக இந்து மாணவர் ஒன்றியம் உதவி

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 25 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு கிழக்குப் பல்கலைக்கழக இந்து மாணவர் ஒன்றியத்தினால் உலர் உணவுப் பொருள்கள் நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க்கிழமையும் வழங்கப்பட்டன.

சுவிஸ், சூரிச் சிவன்கோயில் சைவத் தமிழ் சங்கத்தின் “அன்பே சிவம்” அமைப்பின் நிதியுதவியில் அரிசி, பருப்பு, சீனி, பால்மா, நெத்தலி, செத்தல் மிளகாய், தேயிலை, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பனடோல், பிஸ்கட் என அன்றாட தேவைகளுக்குரிய 15 பொருள்கள் அடங்கிய பொதிகள் 334 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ள மண்டபத்தடி, கொத்தியாபுல, கன்னங்குடா, ஈச்சந்தீவு காந்திநகர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கே இவ் உலர் உணவுப் பொருள் தொகுதிகள் வழங்கப்பட்டன.

இப் பொருள்களை கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் கே.மகேசன், சிரேஸ்ட விரிவுரையாளரும் இந்து மாணவர் ஒன்றிய சிரேஸ்ட பொருளாளருமான கலாநிதி வினோபாவா, கிழக்குப் பல்கலைக்கழக இந்து மாணவர் ஒன்றிய நிருவாக உறுப்பினர்கள், கிராம சேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை பகல் விநியோகித்தனர்.

கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலயம், கன்னங்குடா மகாவித்தியாலயம் ஆகிய இடங்களில் வைத்து, இந்த பொருள்கள்  விநியோகிக்கப்பட்டன.

மழைக்காலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொழில்களுக்கும் வேறு இடங்களுக்கும் செல்ல முடியாதுள்ள மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.




  Comments - 0

  • Mathan Tuesday, 25 December 2012 11:01 PM

    உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X