2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மட்டு. மத்தி கல்வி வலயத்திற்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக எம்.அஹமட் லெவ்வை நியமிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் முதலாம் திகதி அவர் தனது கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய யு.எல்.எம்.செயினுதீன் ஓய்வுபெறுகின்றார். இவ்வெற்றிடத்திற்கு எம்.அஹமட் லெ;வவையை கிழக்கு மாகாண கல்வியமைச்சு நியமித்துள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அலுவலகத்தில் பிரதி வலய கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய சேகு அலி கிண்ணியா வலய கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் 13 உத்தியோகஸ்தர்கள் வேறு அலுவலகங்களுக்கு இடமாற்றப்படவுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X