2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

யுத்தம் மற்றும் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 31 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(லத்தீப்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த சூழல் மற்றும் வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அங்கீகாரத்தில் மட்டக்களப்பு  கெத்செமனே கொஸ்பல் தேவாலயத்தின் ஏற்பாட்டில் இன்று இந்த வாழ்வாதார உதவிகள் கொழும்பு எம்.ஜே.எப். பவுண்டேசனின் நிதியுதவியில் வழங்கப்பட்டன. இந்த நிவாரண உதவிகளுக்கு எம்.ஜே.எப்.பவுண்டேசன் மூலம் அதன் தலைவர் டில்கான். சி. பனான்டோ சுமார் 16 இலட்சம் ரூபாவை நிதியுதவியாக வழங்கியிருந்தார்.

இந்த தேவாலயத்தின் பிரதம போதகர் வண. பி.டபிள்யூ.மரியதாஸ் அடிகள் தலைமையில் நடைபெற்ற இந்த வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் யுத்தம் மற்றும் வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களுக்கு பல்வேறு வகையான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் திருமதி. சிவகீத்தா பிரபாகரன் இராணுவவத்தின் 231வது படைப்பிரிவு கட்டளை அதிகாரி கேர்ணல் சுதத்த திலகரட்ண, எம்.ஜே.எப். நிறுவனத்தின் இணைப்பாளர் எஸ்.கமலநாதன் மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் சிறுவர், பெண்கள் நலன்பிரிவு அதிகாரி எஸ்.டபிள்யூ.சிறிவர்த்தன, மட்டக்களப்பு போதகர்கள் ஐக்கிய சங்க தலைவர் வண. கே.விஜயன் உட்பட பலபிரமுகர்கள் பிரசன்னமாயிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X