2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மட்டு. மத்தி வலய கல்வி பணிப்பாளராக அஹமட்லெவ்வை நியமனம்

Super User   / 2013 ஜனவரி 01 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளராக அக்கரைப்பற்றை சேர்ந்த எம்.ஏ. அஹமட்லெவ்வை நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளராக கடந்த பல வருடங்களாக கடமையாற்றிய யூ.எல்.எம்.செயினுதீன் நேற்று டிசம்பர் 31ஆம் திகதி ஒய்வுபெற்றுள்ளார். இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே அஹமட்லெவ்வை வலய கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மத்தி வலய புதிய கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அஹமட்லெவ்வை இதுவரை கல்வி அமைச்சின் சமய விவகார பிரிவின் பிரதி பணிப்பாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலகத்தில் கடமையாற்றிய சுமார் 13 முகாமைத்துவ உதவியாளர்கள் இன்று  முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X