2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மட்டு. கொள்ளைச் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 01 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு - திருமலை வீதி வர்த்தகர் வீட்டுக் கொள்ளையின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்படாத நிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 4 பேரும் 14 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளை அடுத்து நேற்றைய தினம் பகல் நீதீமன்றத்தில் நிறுத்தப்பட்டதையடுத்து இந்த விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை சந்தேகத்தின் பேரில் வவுனியாவைச் சேர்ந்த வாகன உரிமையாளர் மற்றும் அதனை ஏற்பாடு செய்து கொடுத்தவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வாகனம் வாடகை அடிப்படையில், சாரதி மற்றும், எரிபொருள் ஏற்பாட்டுடன் எடுத்துவரப்பட்டுள்ளது. பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை இரவு மட்டக்களப்பு லயன்ஸ் குறுக்கு வீதியில் உள்ள வர்த்தகரான குணரெட்ணம் ஹரிதரன் (34 வயது) என்பவரை வாளால் வெட்டிவிட்டு வீட்டை சூறையாடியதில், 12.45 பவுண் நகையும், 53 400 பணம், 99ஆயிரம் ரூபா பெறுமதியான லப்ரொப், 4 கைப்பேசிகள் கொள்ளையிடப்பட்டிருந்தன. இக்கொள்ளையுடன் சம்பந்தப்பட்டவர்கள் பொலன்னறுவையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X