2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பிரதேசசபை உத்தியோகஸ்தர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 04 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் மேற்பார்வை உத்தியோகஸ்தர் ஒருவரை சாரதி ஒருவர் தாக்கியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதென ஏறாவூர்ப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் குறித்த மேற்பார்வை உத்தியோகஸ்தரை  சாரதி ஒருவர் நேற்று வியாழக்கிழமை தாக்கியுள்ளமை தொடர்பில் ஏறாவூர்ப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் வினோத்தும் தெரிவித்தார்.

தாக்குதலுக்குள்ளானவர் தலையிலும் முகத்திலும்  பாதிக்கப்பட்ட நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேலை பிரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குறித்த மேற்பார்வையாளர், தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் சாரதி கடமைக்கு சமூகமளிக்காமை குறித்து தொலைபேசி  மூலம் வினவியுள்ளார். இந்த நிலையில், சிறிது நேரத்தில் பிரதேசசபைக்கு வந்த சாரதி மேற்பார்வை உத்தியோகஸ்தரை தலைக்கவசத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் வினோத் தெரிவிக்கையில்,

கடமையில் இருந்த உத்தியோகஸ்தரை தாக்கிவிட்டு குறிப்பிட்ட சாரதி தனக்கு சுகயீனம் எனக் கூறிக்கொண்டு ஏறாவூர் வைத்தியசாலையில் சிகிச்சைக்கான அனுமதி பெற்றுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான உத்தியோகஸ்தர் வாய் பேச முடியாதளவுக்கு பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருடைய வாக்குமூலம் பெறப்பட்டதும் இவ்விடயம் குறித்து நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராயப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த தாக்குதல்ச் சம்பவம் தொடர்பான விசாரணையை ஏறாவூர்ப்பற்று பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X