2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்

Kogilavani   / 2013 ஜனவரி 04 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சிஹாரா லத்தீப்)

வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேச மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாட்டில் நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றன.

இதன்போது, அம்பந்தனாவெளி கிராமத்தில் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு அரிசி, மா, சீனி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு உதவிப் பணிப்பாளர் சண்முகராஜன் இன்பராஜன் தெரிவித்தார்.

அம்பந்தனாவெளி கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் வைத்து உதவிப் பணிப்பாளர் இன்பராஜனின் மேற்பார்வையில் இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது வாகரைப் பிரதேச செயலாளர், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு அலுவலக உதவி இணைப்பாளர்களான ஏ.கஷீர், ஏ.சி. அல்தாப் மற்றும் படை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X