2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

றிஸ்வி நகர் அல் இக்பால் வித்தியாலயம் இன்றும் மூடப்பட்டது

Kogilavani   / 2013 ஜனவரி 07 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு,  காத்தான்குடி கல்வி கோட்டத்திலுள்ள புதிய காத்தான்குடி றிஸ்வி நகர் அல் இக்பால் வித்தியாலயம் இன்றும் மூடப்பட்டது.

கடந்த புதன்கிழமையன்று இப்பாடசாலைக்கென நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தை பாடசாலைக்கு பயன்படுத்த தருமாறு கேட்டு றிஸ்வி நகர் கிராம மக்களும் பாடசாலை மாணவர்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதன்போது அங்கு வருகை தந்த மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணி;ப்பாளர் ஏ.எம்.அஹமட் பாடசாலை திங்கட்கிழமை வரை மூடப்படுமெனவும் திங்கட்கிழமை(7.1.2013) இப்புதிய கட்டிடத்தை பெற்றுத்தருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரார்களிடமும் பாடசாலை மாணவர்களிடமும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை இப்பாடசாலைக்கு சென்ற மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணி;ப்பாளர் ஏ.எம்.அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் ஆகியோர் பாடசாலைக்காக நிர்மாணிக்கப்பட்ட அப்புதிய கட்டிடத்தில் இயங்கி வரும் தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபையின் நடவடிக்கைகளை கட்டிடத்தின் மேல் மாடியிலிருந்து அப்புறப்படுத்தி அக் கட்டிடத்தின் மேல் மாடியில் றிஸ்வி நகர் அல் இக்பால் பாடசாலையை இயங்க வைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டபோது பொதுமக்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

தமது பாடசாலைக்கான புதிய கட்டிடத்தின் அனைத்து பகுதிகளையும் எமது பாடசாலைக்காக தரவேண்டும் எனக் கேட்டு மீண்டும் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனால் இப்பாடசாலை இன்றும் இயங்கவில்லை பாடசாலைக்காக வருகை தந்த மாணவர்கள் அக் கட்டிடத்தின் முன்பகுதியிலுள்ள விறாந்தையின் கீழே அமர்ந்திருந்து வகுப்புக்களை பகிஷ்கரித்தனர்.

தமது பாடசாலைக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தை தமது பாடசாலைக்கு தரவேண்டும் தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபையை நடவடிக்கைகளை இக் கட்டிடத்தில் இருந்து எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

இந் நிலையில் இது தொடர்பாக தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபை அதிகாரிகளுடன் பேசி இரண்டாம் கட்டத்தில் கட்டிடத்தின் கீழ் பகுதியையும் பெற்றுத்தருவதாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணி;ப்பாளர் ஏ.எம்.அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் கூறியும் ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அதற்கு சம்மதிக்கவில்லை.

சுனாமி அனர்த்தத்தினால் இப்பாடசாலையின் கட்டிடடம் சேதமடைந்தமைக்காக நோர்வேயின் நிதியுதவியுடன் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.

இந்த பாடசாலைக்கான புதிய கட்டிடம் தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபையின் தொழிற்பயிற்சி நடவடிக்கைகளுக்காக
2009ம் ஆண்டு தொழிற்பயிற்சி அதிகார சபைக்கு வழங்கப்பட்டதால் இந்த றிஷ்வி நகர் அல் இக்பால் வித்தியாலயம் அதன் பழய கட்டிடத்தில் சிரமத்திற்கு மத்தியில் இயங்கி வந்த நிலையில் தமக்குரிய அப் பாடசாலையின் புதிய கட்டிடத்தை தமக்கு வழங்க வேண்டும் எனக்கேட்டு இம் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் பாடசாலை பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X