2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மூடப்பட்டிருந்த றிஸ்வி நகர் அல் - இக்பால் வித்தியாலயம் திறப்பு

Super User   / 2013 ஜனவரி 08 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி

கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த காத்தான்குடி, றிஸ்வி நகர் அல் - இக்பால் வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகள்  இன்று செவ்வாய்க்கிழமை புதிய கட்டிடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளன.

இந்த பாடசாலையின் புதிய கட்டிடத்தை வழங்குமாறு கோரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடாத்திய பாடசாலை பகிஷ்பரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் என்பவற்றில் ஈடுபட்டனர்.

இதனால், குறித்த பாடசாலை கடந்த சில தினங்களாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளர் எம்.ஏ.அஹமட்லெவிற்கும் பெற்றோருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக பாடசாலையின் புதிய கட்டிட மேல் மாடியில் இன்று தொடக்கம் இயங்குவகு என தீர்மானிக்கப்பட்டது.

றிஸ்வி நகர் அல் - இக்பால் வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்தில் தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபையின் தொழிற் பயிற்சி நிலையம் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X