2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மட்டக்களப்பு மாநகர சபை தேசிய மட்டத்தில் ஐந்தாம் இடம்

Kogilavani   / 2013 ஜனவரி 09 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.சுக்ரி
அகில இலங்கை தேசிய மட்டத்திலான உள்ளுளூராட்சி மன்றங்களுக்கிடையிலான முகாமைத்துவ போட்டியில் மாநகர சபை வரிசையில் மட்டக்களப்பு மாநகர சபை தேசிய மட்டத்தில் ஐந்தாம் இடத்தையும் நகர சபை வரிசையில் காத்தான்குடி நகர சபை 7ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.

தேசிய மட்ட திண்மக்கழிவு முகாமைத்துவ போட்டியில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச சபை 3ஆம் இடத்தை பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

இவர்களுக்கான விருதுகளும் பணப்பரிசும் செவ்வாய்க்கிழமை கொழும்பு அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் மட்டக்களப்பு மாநகர சபை, காத்தான்குடி நகர சபை ஆகியவைகளுக்கு தலா ஐம்தாயிரம் ரூபாவும் திருக்கோவில் பிரதேச சபைக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவும் மற்றும் விருதும் வழங்கப்பட்டதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.உதயகுமார் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X