2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

கோரளைப்பற்று மத்தி, மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளுடன் இணைக்கப்படும் பிரதேசங்கள் குறித்த தீர்மானத்த

Kanagaraj   / 2013 ஜனவரி 14 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித், எம்.சுக்ரி

மட்டக்களப்பின்- வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து கோரளைப்பற்று மத்தி மற்றும்; கோரளைப்பற்று மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுடன் இணைக்கப்படும் பிரதேசங்கள் தொடர்பான தீர்மானம் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.

இன்றைய தினம் பிற்பகல், மட்டக்களப்பிலுள்ள தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா  தெரிவித்தார்.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில், பாராளுமன்ற உறுபபினர்களா பொன் செல்வராசா, பா.அரியனேத்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், கி.துரைராசசிங்கம், இந்திர குமார் பிரசன்னா, எஸ்.நடராஜா, ஞா. கிருஸ்ணபிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த பொன் செல்வராசா, எல்லை நிர்ணயம் தொடர்பில் சகல மக்கள் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதுடன் அப்பிரதேசத்தின் சகல மக்களிடமும் ஒப்புதல் பெறப்படவேண்டும் இல்லாது எந்தமானமாக முடிவுகள் எடுக்கப்படக் கூடாது.

இவ்வாறான முடிவுகள் எடுக்கப்படும் போது, புவியியல் சரித்திரம், மக்களின் நிலைப்பாடுகள் குறித்து அறிந்த மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்பட வேண்டும். இவ் விடயம் தொடர்பாக நேற்றைய கூட்டம் நடைபெறுவத்கு முன்னர் கலந்துரையாடிபோது இது ஒரு ஆரம்ப நிலைக் கூட்டம் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் இது இறுதிக் கூடு;டமாக அமைந்திருந்ததாகத் தெரியவருகிறது.

பொது நிருவாக அமைச்சின் மேலதிக செயலாளர் மக்களது வேண்டுகோளை மீறி பிரதேசங்களுக்கு அண்மையில் இருக்கும் காரியாலயத்துடனேயே இப்பிரதேசங்கள் இணைக்கப்பட்டிருக்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுத்ததாகத் தெரிகிறது.
அத்துடன் இரண்டு அரசியல்வாதிகளின் ஒப்புதலுடன் இரகசியமாகச் செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். இதில் பிரதி அமைச்சர் வி.முரளிதரன், மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.அமீர்அலி ஆகியோரே இந் ஒப்புதலை வழங்கியிருக்கிறார்கள்.

இந்த மாவட்டத்தில் பல அரசியல்வாதிகள் இருக்கத்தக்கதாக இருவரை மாத்திரம் ஒப்புதலுக்குட்படுத்துவது ஏன் என்பதுகுறித்து கேள்வி எழுகிறது.

இந்த பிரதேச எல்லைப்பிரிப்பு ஒரு சாராருக்கு விருப்பமுடையதாக இருந்தாலும் மறுசாராருக்கு விருப்பமற்ற செயற்பாடாக இருக்கும். அத்துடன் கட்டாயப்படுத்தல் நடைபெறக்கூடாது.

இந்தப்பிரதேச செயலகப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த நிலையை விடுத்து தற்போது அவசரமாக மாற்றத்தினைக் கொண்டுவருவதற்கான தேவை ஏன் ஏற்பட்டது என்பது கேள்வி எழும்புகின்றது.

இன ரீதியான பிரதேச செயலகங்கள் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

எங்களைப் பொறுத்தமட்டில், எதனையும் ஏற்றுக் கொள்ள நாங்கள் தயார் ஆனால் சகல பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி முடிவுகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும், அதே நேரம், குறிப்பிட்ட பிரிவுகளின் மக்களிடம் ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையில் இந்த முடிவினை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்த் தீர்மானம் இரத்துச் செய்யப்பட வேண்டும்.

இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்றினை பொது நிருவாக அமைச்சின் மேலதிக செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X