2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

தமிழ் கிராமங்களை முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகளுடன் இணைத்தல் மீள் பரிசீலனை

Super User   / 2013 ஜனவரி 16 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி, ரி.லோஹித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்திலுள்ள கிரான் மற்றும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள ஒரு சில கிராமங்களை ஓட்டமாவடி மற்றும் கோரளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுடன் இணைப்பதற்கு எடுத்த முடிவை மீள் பரிசீலனை செய்யப்படும் என பொதுநிருவாக உள் நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் டளலகே உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக தன்னிடம் அவர் தெரிவித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கிரான் மற்றும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுகளில் புனானை கிழக்கு, வாகனேரி ஆகிய கிராமங்களை ஓட்டமாவடி மற்றும் கோரளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகங்களுடன் இணைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு கேட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கடிதமொன்றை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் மேலதிக செயலாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு பதிலலிக்கும் வகையில் அமைச்சின் மேலதிக செயலாளர் இன்று என்னுடன் தொடர்புகொண்டு இந்த முடிவை மீள் பரிசீலனை செய்யும் வகையில் மட்டக்களப்ப மாவட்டத்திலுள்ள சகல அரசியல் பிரமுகர்களையும் அழைத்து மீண்டுமொரு முறை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கூட்டத்தை நடாத்தி தீர்மானிப்போம்" என்றார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழும் கிராமங்களை முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகளுடன் இணைப்பதற்கான முயச்சிகளை உடன் நிறுத்துமாறு  ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான அருண் தம்பிமுத்து ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X