2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

மட்டு. மாவட்ட எல்லை நிர்ண மீளாய்வு கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெறும்: அமைச்சர்

Super User   / 2013 ஜனவரி 17 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எல்லை நிர்ண மீளாய்வு தொடர்பான கூட்டம் நாடாளுமன்ற கட்டிடத்தில் நடாத்தப்படும் என பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லை நிர்ணயம் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சையை தீர்த்து வைக்கும் பொருட்டே இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசாவுடன் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த தகவலை தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பின் பொன் செல்வராசா தெரிவித்தார்.

இந்த கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் அழைக்கப்படுவார்கள் எனவும் அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்புவிடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு, கல்குடா தேர்தல் தொகுதியிலுள்ள கிரான் மற்றும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள தமிழ் கிராமங்கள் சிலவற்றை கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலகங்களுடன் இணைக்க எடுத்த தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X