2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

அஷ்ஷஹீத் ஏ அஹமட் லெவ்வை ஞாபகார்த்த மண்டபம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 18 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி,-ஜிப்ரான்


காத்தான்குடியில் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன அலுவலகக் கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் நிர்மாணிக்கப்பட்ட அஷ்ஷஹீத் ஏ அஹமட் லெவ்வை ஞாபகார்த்த மண்டபம் நேற்று வியாழக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத்தினால் இம்மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சம்மேளனத்தின் தலைவர் மர்சூக் அகமது லெவ்வையின் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல்ஜவாத், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமாவின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார், சம்மேளனச் செயலாளர் மௌலவி ஏ.எம்.அப்துல்காதர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தால், நாடாளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத்துக்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.

இம்மண்டபத்தின் புனரமைப்பு வேலைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத் தனது நிதியிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X