2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

தமிழ் - முஸ்லிம் கிராமங்கள் இணைப்பு; எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஹர்தால்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 18 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மற்றும் கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள தமிழ் கிராமங்கள் சிலவற்றை கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி ஆகிய முஸ்லிம் பிரதேச செயலக பிரிவுகளுடன் இணைப்பதற்கு பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்தும் அந்த முடிவை உடனடியாக ரத்து செய்யுமாறு வலியுறுத்தியுமே இந்த கடையடைப்பு ஹர்தால் இடம்பெறுகின்றது.

இந்த ஹர்தால் காரணமாக மட்டக்களப்பு நரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மட்டக்களப்பு பொதுச் சந்தையிலுள்ள பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுச்சந்தை என்பனவும் மூடப்பட்டுள்ளன.

இதேபோன்று ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள சில அரச அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன.  பாடசாலைகள் திறக்கப்பட்ட போதிலும் சில பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த பிரதேசங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



  Comments - 0

  • Ragu Sunday, 20 January 2013 11:34 AM

    சம்பந்தனை நம்பி பலன் இல்லை. இருப்பதையும் தொலைப்பதை விட மாற்றுவழி தேடுங்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X